cinema news
தனுஷின் ரவுடி பேபி பாடல் முடக்கம்- வுண்டர் பார் பிலிம்ஸ் யூ டியூப் சேனலும் முடக்கம்
தனுஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்த பாடல் ரவுடி பேபி பாடல். இந்த பாடல் பாலாஜி மோகன் இயக்கத்தில் வந்த மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்தது.
முதல் பாகமாவது கொஞ்சம் பேசப்பட்ட நிலையில் மாரி 2 இரண்டாம் பாகம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருப்பினும் இந்த மாரி 2 பாடலான ரவுடி பேபி பாடல் 120 கோடி பேரை சென்றடைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார், இந்த பாடலுக்கு அழகிய நடனத்தை பிரபுதேவா அமைத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வெளியிட்ட தனுஷின் நிறுவனமான வுண்டர் பார் நிறுவனத்தின் யூ டியூப் சேனலும், ரவுடி பேபி பாடலும் முடக்கப்பட்டுள்ளது.
இது தனுஷ் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.