டிக் டாக் வீடியோவால் வந்த வினை – நண்பரை கொலை செய்த வாலிபர்

442

ஒரு டிக் டாக் வீடியோவால் ஒரு வாலிபர் தனது நண்பரை அடித்து கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ல தாழவேடு எனும் கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவரின் நெருங்கிய நண்பர் விஜய். வெங்கட்ராமன் அவரது கிராமத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட சாதி மக்களை இழிவாகி பேசி ஒரு டிக் டாக் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.

இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே, வீடியோ வெளியிட்ட வெங்கட்ராமனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது தெரிந்தவுடன் விஜயும், வெங்கட்ராமனும் தலை மறைவாகினர்.

இதனையடுத்து, காவல்துறையினர் வெங்கட்ராமனின் தந்தையை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில், வெங்கட்ராமனும், விஜயும் ஒரு இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது, தனது தந்தையை போலீசார் அழைத்து சென்றுவிட்ட ஆத்திரத்தில் ஆவேசம் அடைந்த வெங்கட்ராமன் விஜயின் தலையில் வேகமாக கட்டையில் அடித்துள்ளார். இதில், விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து வெங்கட்ராமன் திருத்தணி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பாருங்க:  தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ள தொகை எவ்வளவு? வெளியானது தகவல்!