சென்னை வந்தார் பிரதமர் மோடி; பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம்!

415

அதிமுக தலைமையிலான, நாடாளுமன்ற பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை 4.30 மணியலவில் துவங்கியது.இதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தம்பிதுரை, செங்கோட்டையன் மேலும் பலர் பங்கேற்றனர்.தமிழக பா.ஜ.க தலைவர், தமிழசை சௌந்தராஜன், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் அண்புமணி இராமதாஸ், பா.ஜ.க மக்களவை உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

என்.ஆர் காங்கிரஸ் தலைவர் இரங்கசாமி, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை பொன்னாடைப் போற்றி வரவேற்றனர்.முதல்வர் மற்றம் துணை முதல்வர் பிரதமர்க்கு நினைவு பரிசு வழங்கினர்.

பின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி.பின் பா.ஜ.க சார்பில் செங்கோல் பரிசளிக்கப்பட்டது. பின் எம்.ஜி.ஆர் கலைக் கல்லூரியில் உள்ள எ.ம்ஜி.ஆர் சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.சாலை, ரயில்,எரிசக்தி துறையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பாருங்க:  தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க - ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்!