பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில், மத்திய அரசானது மக்களுக்காக உழைக்கும் அரசாகும். தமிழக மக்கள் எங்கு சிறைப் பிடிக்கப் பட்டாலும், அவர்களை உடனே மீட்டு கொண்டு வருவதில் மும்முரமாக செயல்ப்படும் என கூறினார்.மத்திய அரசானது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் நடக்கும் அரசு என கூறினார்.
இந்த உலகிற்கே தெரியும், எப்படி அபிநந்தன் இரண்டே நாளில் மீட்டு கொண்டு வரப்பட்டார் என்றும் உரைத்தார்.
இலங்கையில் சிறைப் பிடிக்கப்பிடிக்கப் பட்ட 1900 மீனவர்களை மீட்டெடுத்தது, அது மட்டுமில்லாமல் தூக்கு தண்டனையில் இருந்து மீட்டெடுத்ததையும் சுட்டிக் காட்டினார்.சவுதி அரசாங்கத்தின் இளவரசரிடம் பேசி, அங்குள்ள 850 கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சி மேம்பட்டுள்ளது. யாருக்கு வலி ஏற்பட்டாலும், புண்ணுக்கு காயமாற்றும் அரசு நம் அரசு என உரைத்தார்.அதே போல், அந்நிய சுற்றுலா பயணிகள், இங்கு வர 66 நாடுகளுடன் பேசி ஈ.விசா வசதி செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு கூறி, மக்களவை தேர்தலில் இக்கூட்டணி மெகா வெற்றி பெறும் எனக் கூறி உரையை முடித்தார்.