Published
10 months agoon
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தெறி படத்தின் மூலம் உச்சம் தொட்டார்.
இவரது அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆன நிலையில் இன்று முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். இவரது உதவி இயக்குனராக இருந்தவர்தான் சிபி சக்கரவர்த்தி. இவர்தான் சிவகார்த்திகேயனை வைத்து இன்று வெளியாகியுள்ள டான் படத்தை இயக்கியுள்ளார்.
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் அட்லி, நண்பர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதோடு டைரக்டர் சார் ரொம்ப பெருமையா இருக்கு எமோஷனல் மூவி நல்ல படம் லவ் யூ டா என ஒட்டுமொத்த டீமையும் புகழ்ந்துள்ளார்.