சின்மயி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

252
சின்மயி போராட்டம்

பாலியல் புகாரில் சிக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் யோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாடகி சின்மயிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகாரை கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியது. இதுபற்றி விசாணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே, 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வும் அமைக்கப்பட்டது. ஆனால், அப்பெண்ணின் புகாரில் உண்மையில்லை என அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில்தான், உச்ச நீதிமன்ற நீதிபதி கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு பாடகி சின்மயி தமிழக காவல் துறையிடம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல் துறை மறுத்துவிட்டது. புகாரில் உண்மையில்லை என நீதிமன்ற அமர்வு கூறிவிட்ட நிலையில், சின்மயி போராட்டத்துக்கு அனுமதி கொடுப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அது நீதித்துறை மீது தவறான பார்வையை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

பாருங்க:  நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!