சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி, “கின்னஸ் சாதனை”

323

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் 7190 நடன கலைஞர்கள், நாட்டியாஞ்சலி நடனம் ஆடி கின்னஸ் சாதனை புரிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி நடைப்பெறும். அதே போல் இந்த ஆண்டும் நாளை சிவராத்திரி வருவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

சுமார் 7190, சிறுமிகள் மற்றும் மாணவிகள் நடனமாடிய நிகழ்ச்சி காண்போரை நெகிழ்வித்தது.

பல்லாயிரம் கணக்கான மாணவிகள் நடனத்தை லண்டனில் இருந்து வந்திருந்த கின்னஸ் அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.

இதனை பதிவு செய்த அதிகாரிகள் விழாவின் முடிவில், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை விழா குழுவினரிடம் வழங்கினர்.

பாருங்க:  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு