சிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி

சிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி

நம் நாட்டில் நடக்கும் குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்க, குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாரக்கள் காவல் துறையினருக்கு பெரும் உதவிகரமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பல்வேறு இடங்களில் கேமாரக்கள் பொருத்துவதற்காக, சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 3 ஆம் வகுப்பு சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை காவல் துறையினருக்கு வழங்கினார்.

நிதி வழங்கிய சிறுமியை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை சத்தியநாரயணா கூறியுள்ளதாகவும், எனவே காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் தன்னால் முடிந்த உதவியை செய்ததாகவும் சிறுமி ஸ்ரீஹிதா கூறினார்.