சர்வதேச மகளிர் தினம் 2019; பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம்!

311
சர்வதேச மகளிர் தினம் 2019

நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, பெண்களை கவுரவிக்கும் வகையிலும், பெண்களால் எதுவும் முடியும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பெண் விமானிகளைக் கொண்டு சென்னை – டெல்லி செல்லும் விமானம் இயக்கப்பட்டது.

விமானி தீபாவின் முன்னிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் விமானத்தை இயக்கி உள்ளனர். காலை 6.10க்கு சென்னையில் இருந்து கிளம்பி 8.15 க்கு டெல்லி சென்று அடையும். மீண்டும் அங்கிருந்து 9.45 க்கு கிளம்பி, 12.40 க்கு சென்னை வந்து அடையும்.இதுகுறித்து,

செய்தியாளர்களை சந்தித்த விமானி தீபா கூறியதாவது:
உலக மகளிர் தினத்தை ஒட்டி, 6 விமானிகள், பிருந்தா, ஷாலினி, ஸ்கேரியா, அஞ்சு லட்சுமி, ஆலிஸ் ஆகிய விமானிகள் குழு இன்று விமானத்தை இயக்க உள்ளோம் எனவும், பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் எனவும் பெண்கள் திறமையோடு செயல்ப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாருங்க:  கள்ளக்குறிச்சி எம்.எல்.வின் சாதி மறுப்பு திருமணம்