சர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்!

510

மக்களவை தேர்தலில், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக கூறியவர், 49-பி பிரிவில் தன் வாக்கை பதிவு செய்துள்ளார். அதனால், சர்கார் படத்தில் 49-பி பிரிவை அறிமுக படுத்திய ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 18 ) நடந்த நிலையில், பலரின் வாக்குகளை வேறு ஒருவர் போட்டுவிட்டனர். அந்த நிலையில், கணேஷ் ராஜா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஏ.ஆர். முருகதாஸ்கும், நடிகர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோவில் பேசிய அவர் : “என் ஓட்டை கள்ள ஓட்டு போட்டுடாங்க, 2 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு 49-பி பிரிவில் என் வாக்கை Ballot ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பினேன்.

இதனால், 49-பி பிரிவை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த சர்கார் படத்தின் இயக்குநர் முருகதாஸ்க்கும், நடிகர் விஜய்க்கும் நன்றி …இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

பாருங்க:  சிவகார்த்திக்கேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஓட்டு இல்லையா?
Previous articleTN 12th +2 Result 2019 – How to Check Plus 2 Result Online Tamil
Next articleதமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாசாஹூ!