சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

22

விருதுநகர் மாவட்டத்தோடும் மதுரை மாவட்டத்தோடும் இணைந்த ஒரு மலையாய் சதுரகிரி மலை உள்ளது. இங்கு சுந்தரமஹாலிங்க ஸ்வாமி கோவில் என்ற புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது.

மனதுக்கு அமைதியை தரும் இந்த கோவிலில் 18 சித்தர்கள்  மலை முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளனர்.

மிக சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு முன்பு நினைத்த நேரத்தில் பக்தர்கள் சென்று வந்த நிலையில் 6 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிலர் பலியானதால், அமாவாசை, பெளர்ணமி போன்ற முக்கிய தினங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தற்போதுதான் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஆனி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 நாட்களிலும் காலை 7 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மலை ஏறலாம். ஓடைகளில் நீராட தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  சுல்தான் படத்தின் முதல் பாடல் எப்போது
Previous articleதேவாவுடன் பாடல் பாடிய லாஸ்லியா
Next articleதமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது