சங்கீத வித்வான் பாடுவது போல் பன்னீரின் பட்ஜெட் உரை – கலாய்த்த ஸ்டாலின்

318
Stalin comment on tn govt budget

தமிழக அரசு சார்பில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

2019-2020ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆனால் அது ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட் என திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் “இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட். சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப ஓ.பி.எஸ் சொல்கிறார். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் கிண்டலாக கூறியுள்ளார்.

பாருங்க:  ஸ்டாலின் செய்தது நீதிமன்ற அவமதிப்பு- முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை