Latest News
கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்
இலங்கையில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா பொருட்களும் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயையும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேயையும் வெளியேற சொல்லி மிக கடுமையான முறையில் போராட்டம் நடத்தி விட்டனர் ஆனால் என்ன போராட்டம் நடந்தாலும் அண்ணனும் தம்பியுமான ராஜபக்சேக்கள் அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள்.
இந்த நிலையில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையான அலரி மாளிகை முன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது ராஜபக்சேயின் தொண்டர்கள் வடிவில் குண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த போலீசார் விலக்கப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அதிக கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் கொழும்பு மட்டுமல்லாது இலங்கை முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.