கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு சிறுநீரகமும் பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்கள் அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சனையால அவதிப்படுகின்றனர். இப்போது இந்த வைரஸால் நுரையீரல் மட்டுமல்லாது சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி சர்வதேச சிறுநீரக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘5 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் ‘அக்கியுட் கிட்னி இன்ஜுரி’ எனும் கடுமையானக் காயம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும் புரதத்தையும் கசிய செய்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.