Corona (Covid-19)
கேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்தது. உ.பி, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகினர் மக்கள். வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும் வேகமாக பரவிய கொரோனா தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 36,000 பேரை நெருங்கியது. பின்பு வட மாநிலங்கள், தென் மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நோய்த்தொற்று குறைந்து வந்த நிலையில் கேரளாவில் மட்டும் இதுவரை குறையவில்லை.
ஜூன் 28 முதல் கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. கடந்த ஜூன் 28-ல் 8,063 ஆக இருந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 15,600 ஆக அதிகரித்தது.
இம்மாநிலம் கடந்த ஜூன் 9-ம் தேதி, 16,204 நோயாளிகளுடன் 15,000 என்ற வரையறையை கடந்தது. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 148 என்பது கூட, கடந்த ஜூன் 24-க்கு பிறகு மிக அதிகமாகும்.
இது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது