Entertainment
கேஜிஎஃப் 3 வெளியாகும் ஆண்டு அறிவிப்பு
கன்னடத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கேஜிஎஃப் 1. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பயங்கர வெற்றி பெற்றது. பான் இந்தியா படம் என்று சொல்லும் அளவுக்கு மாநில மொழி படமாக மட்டும் அல்லாமல் இந்திய அளவில் படம் ஹிட் ஆனது.
அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் 2 கடந்த தமிழ் வருடப்பிறப்பான கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் அதிரி புதிரி ஹிட் என சொல்லும் அளவுக்கு இன்று வரை மிகப்பெரிய ஹிட் படமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அடுத்தபடியாக இதே கூட்டணியில் அதே யாஷ் நடிக்க கேஜிஎஃப் 3 படம் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படம் வரும் 2024ம் ஆண்டு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
