குற்றவாளிகளை கண்டறிய புதிய ஆப்

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் புதிய ஆப்!

நாடு முழுவதும் குற்றம் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி அதன் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்தது காவல்துறை.ஆனால், தற்போது குற்றவாளிகளின் முகங்களை தெளிவாக காட்டிக்கொடுக்கும் ஆப்பை கண்டுபிடித்துள்ளது ஹரியானாவை சேர்ந்த தனியார் செயலி நிறுவனம்.

அதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில் :

பல்வேறு மாநில போலிஸாரிடம் இருந்து, குற்றவாளிகள் குறித்த விபரங்களை சேகரித்து, முழுமையான தகவல் பதிவை உருவாக்கி உள்ளோம். இந்த செயலியில், முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் உள்ளது. ஒரு குற்ற செயலில் ஈடுபடுபவனின் புகைப்படத்தையோ, வீடியோவையோ, அது குறைந்த தரத்தில் இருந்தால் கூட, இந்த செயலியில் பதிவேற்றினால், நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளின் விபரங்களுடன் ஒப்பிட்டு, அந்த நபரை அடையாளம் காட்டிவிடும்.

தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபடுவோரால் தான், 70 சதவீத குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருவதாக, தேசிய குற்றபதிவின் ஆய்வு தெரிவிக்கிறது.இதே போன்ற செயற்கை நுண்ணறிவு செயலியை, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது. இதை, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர போலிஸார் பயன்படுத்தி வரிகின்றனர்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, விஜய் ஞான தேசிகன் கூறியதாவது :

இந்த செயலியில் 75 ஆயிரம் குற்றவாளிகளின் முகங்களை பதிவு செய்துள்ளோம். இதன்மூலம் குற்றவாளிகளை, 99.4 சதவீதம் துல்லியமாக அடையாளம் காண முடியும்.முகத்தை அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் மட்டுமில்லாமல் காணாமல் போன குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடியும்.

மாநிலம் விட்டு மாநிலம் குழந்தை கடத்தப்பட்டால், அக்குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அந்த குழ்தையின் பெற்றோர் குறித்த விவரங்களை உடனே கண்டுபிடித்து விட முடியும், என அவர் கூறினார்.