Connect with us

கும்பகோணம் பகுதியில் கோவில் கோவிலாக சுற்றிய நயன்

Latest News

கும்பகோணம் பகுதியில் கோவில் கோவிலாக சுற்றிய நயன்

இயக்குனர் விக்னேஷ் சிவனும் , நயன் தாராவும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் சில பிரார்த்தனைகளுக்காக கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர்.

அப்படியாக விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான கும்பகோணம் அய்யம்பேட்டைக்கு அடுத்ததாக இருக்கும் வழுத்தூர் கிராமத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று வழிபட்டனர்.

இதற்காக திருச்சி விமான நிலையம் வந்த இருவரும், காரில் கும்பகோணம் புறப்பட்டனர் , விக்னேஸ் சிவனின் குல தெய்வ கோவிலுக்கு சென்று இருவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பிறகு கும்பகோணம் நகரில் உள்ள சில கோவில்களுக்கு சென்றனர். முக்கியமாக கும்பகோணம் நகரத்தின் மையப்பகுதியான ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் யானைக்கு வாழைப்பழம் கொடுத்து வணங்கினார்.

சிறு பிள்ளை போல யானைக்கு முதலில் வாழைப்பழம் கொடுக்க நயன் தயங்கினார். பின்பு யானைக்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது.

பாருங்க:  லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் ஜெயிலில் உயிரிழப்பு

More in Latest News

To Top