காங்கிரஸின் 687 போலி கணக்குகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!

394

காங்கிரஸ் கட்சியின் போலியான 687 ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.
போலி கணக்கு (Fake Account) உருவாக்கி, அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்கட்சிக்கு சாதகமான புகைப்படங்கள், வீடியோக்கள், மீம்ஸ் அனைத்தும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து, ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில் :

அவர்களுடைய பதிவுகளில் உள்ளூர் செய்திகள் மற்றும் அரசியல் எதிரிகளை விமர்சனம் செய்வதாக இருந்தது. இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ளவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.எங்களுடைய ஆய்வில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற (அடையாளம் மறைக்கப்பட்டு செயல்படும் கணக்குகள்) வகையில் கணக்குகளை பராமரிப்பது காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதனால், அந்த அனைத்து கணக்குகளையும் முடக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

பாருங்க:  ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்