Entertainment
கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்
இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதி மன்னர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இவர்களின் பங்கு அளப்பறியது. தென்மாவட்டங்கள் என்றாலே சேதுபதி மன்னர்களின் பங்கு எல்லா விசயத்திலும் இருக்கும்.
ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களை மன்னர் குடும்பம்தான் நிர்வகித்து வருகிறது. இந்த சேதுபதி மன்னரின் குடும்பத்தின் இளையவாரிசாக இருந்து வந்தவர் மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி இவர் இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலின் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் இவரது மறைவுக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தனது வருத்தங்களை தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் இராமநாதபுரம் அரண்மனையில் தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மன்னரின் மறைவு குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது. நான் பிறந்த வீடு அவர்களின் அரண்மனை. மன்னர் ஆட்சி வீழ்ந்த அக்காலத்தில் நட்பை மதித்து மருத்துவம் கிடைப்பதரிதான 1954-ல் என் தாய் பிழைக்க உதவிய மனிதனின் பேரனுக்கு என் வழி அனுப்பும் வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.
