கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 2 மணி நேரம் கன மழை பெய்தது. செஞ்சி சுற்று வட்டாரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், வெப்ப சலனம் தீர்ந்து, குளிர்ச்சி பரவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் , கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது.

கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடலூரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காற்று வீசியதால், புதுச்சேரியில் பல இடங்களிலும், கடலூரில் சில இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதன் சுட்டுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது.

இதனால், இன்றும் தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய கனமழையை எதிர்ப்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.