அரசியல் கட்சி வருமானம் 2019

ஒரே நிதியாண்டில் 800% அதிகரித்த திமுக வருமானம்!

ஒரே நிதியாண்டில், திமுகவின் வருமானம் 800 சதவீதம் உயர்ந்து உள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வருமான விவரங்களை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும்.அதனை சோதனை செய்த நிலையில், கடந்த நிதியாண்டு (2016-17)ல் வெறும் 3.78 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு(2017-18)ல் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.இது 845.71 சதவீதம் உயர்வு என குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியான ஆதிமுக வின் வருமானம் இந்த ஆண்டு (2017-18) நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானம் பெற்றுள்ளது.கடந்த நிதியாண்டில் 48.7 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 74 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.கடந்த 2017-18 ஆண்டில் 37 கட்சிகளின் மொத்த வருமானம் 237.27 கோடியாகும். அதில் முதல் 3 கட்சிகள் (சமாஜ்வாதி, திமுக, டி.ஆர்.எஸ்) ஆகும்.