Tamil Flash News
ஒருவழியாக பிடிபட்ட சின்னதம்பி யானை
உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவந்த சின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த சில நாட்களாகவே உடுமலைப்பேட்டை மக்கள் வசிக்கும் பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி வருகிறது. அதைபிடிக்க 2 கும்கி யானைகள் வரவழகைப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல், காயப்படுத்தாமல் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி சின்னதம்பி யானை மீது இன்று 2 மயக்க ஊசிகளை வனத்துறையினர் செலுத்தினர். அதன்பின்னும் மயக்கமடையாமல் கரும்பு காட்டுக்குள் சின்னதம்பி புகுந்துகொண்டு 3 மணி நேரம் வனத்துறையினரை தவிக்க விட்டது. பின்னர் ஒருவழியாக கும்கி யானைகளின் உதவியுடன் சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றினர். இதையடுத்து, அவர்கள் பெருமூச்சு விட்டனர்.