TANCET நுழைவுத்தேர்வு

எம்.இ, எம்.டெக் படிப்புக்கான TANCET நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

2019ம் கல்வி ஆண்டில், எம்.இ, எம்.டெக் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அண்ணா பல்கலை நடத்தும் நுழைவு தேர்வு மற்றும் இதர கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு ஆகிய இரு தேர்வுகளையும் எழுத வேண்டுமா என மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகம் தனது பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப் போவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தது.

இந்நிலையில், தனி தனி நுழைவு தேர்வு நடத்தாமல், ‘டேன்சட்’ நுழைவு தேர்வை மட்டும் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கு உயர்கல்வி துறை அறிவுறுத்தியது.

இதை தொடர்ந்து, ‘டான்சட்’ நுழைவுத்தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே சுரப்பா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த எம்.கே சுரப்பா ‘டான்சட்’ நுழைவுத்தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொது தேர்வு நடத்தப்படாது என அறிவித்தார். இதனால், தேர்வு குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.