என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர் – மதுமிதா பரபரப்பு பேட்டி

263

விஜய் தொலைக்காட்சி தன் மீது கொடுத்துள்ளது பொய் புகார் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்த நடிகை மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். கையில் கைட்டு போட்டிருந்ததால் அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாலேயே வெளியேற்றப்பட்டார் என செய்திகள் பரவியது.

இந்நிலையில், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை உடனே கொடுக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டியதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ள மதுமிதா ‘விஜய் டிவி என் மீது கொடுத்திருப்பது முழுக்க பொய் புகார் ஆகும். சம்பளம் தொடர்பாக எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. என் பெயரை கெடுப்பதற்காக இப்படி செய்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  ரசிகர்கள் தயாராக இருக்கவும்! பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள்..