Connect with us

எஃப். ஐ.ஆர் எனக்கு கம்பேக் படம்- விஷ்ணு விஷால்

Entertainment

எஃப். ஐ.ஆர் எனக்கு கம்பேக் படம்- விஷ்ணு விஷால்

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இப்படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”இப்படம் என்னுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளது. இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு மிகப் பெரிய அனுபவத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ராட்சன் படத்துக்குப் பிறகு வெளியான என்னுடைய மூன்று படங்கள் சரியாக ஓடவில்லை. ஆனால், ராட்சனுக்குப் பிறகு நான் முதலில் தேர்வு செய்த கதை ‘எஃப்.ஐ.ஆர்’. அதன் பிறகு நான் ஒப்பந்தமான 8 படங்களும் தொடங்கப்படவில்லை. இப்போது ‘எஃப்.ஐ.ஆர்’ வெளியாவதற்கு முன்பாகவே ராட்சனை விட அதிகமாக பாராட்டப்படுகிறது.

நான் ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’ என வெவ்வேறு வகையிலான திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். வெவ்வேறு படங்கள் மூலமாக பார்வையாளர்களை என்னால் மகிழ்விக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் கதையை நான் நம்பியதால் நானே இப்படத்தை தயாரிக்கவும் முன்வந்தேன். ஒரு தயாரிப்பாளராகவும் இப்படம் எனக்கு ஒரு கம்பேக் ஆக இருக்கும்” என்றார் விஷ்ணு விஷால்.

பாருங்க:  என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு- விஷ்ணு விஷால் விளக்கம்

More in Entertainment

To Top