உலக மகளிர் தினம் 2019; தமிழக தலைவர்கள் வாழ்த்து!

714
உலக மகளிர் தினம் 2019; தமிழக தலைவர்கள் வாழ்த்து

உலகில் உள்ள பெண் இனமானது மகத்துவம் நிறைந்த இனம் ஆகும். பெண்ணால் முடியாத காரியம் என எதுவும் இல்லை, பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று பெண்கள் வளர்ந்து உள்ளனர். அனைத்து துறைகளிளும் கோலூன்றி வெற்றி பெற்று வீர மங்கைகளாக வளம் வருகின்றனர்.

அத்தகைய, மகளிர் தினத்தை ஒட்டி, தமிழக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், பெண்களின் சிறப்பையும், உரிமைகளையும் பறைசாற்றும் வகையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி உடனும் செயல்பட்டு சோதனைகளை உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும். இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில்: நாம் நம் இந்திய நாட்டை பாரத மாதா என்றும், இந்திய தாய் என்றும் மரியாதை செலுத்தி வருகிறோம், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நமது சமுதாயத்தை மிக சிறந்த பீடத்தில் உயர்த்த பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைத்த உடன் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வர பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தமிழ்நாட்டில் ஊரடங்கு 5.0 தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்!