Tamil Flash News
உதவிப்பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்தது!
பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது.
அந்த வழக்கில் சம்மதப்பட்டதாக கூறி மதுரை காமராசர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர்.
அதை தொடர்ந்து, முருகன் மற்றும் கருப்பசாமி ஜாமின் பெற வழக்கு பதிந்தர். அவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு பிறகு ஜாமின் கிடைத்தது.ஆனால், நிர்மலா தேவி சிறையில் தான் இருந்தார், அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
அதற்கு பிறகு, நிர்மலா தேவி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு வழக்கு பதிந்தார். இதில் நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க உத்திரவிட்டது.அதை அடுத்து, உச்ச நீதிமன்றம் உத்திரவின்படி, ஊடகங்களுக்கோ, தனி நபர்கோ பேட்டி அளிக்க கூடாது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு நிர்மலா தேவிக்கு நீதிபதி முமெதாஜ் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.
ஜாமீன் உத்திரவு மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, இன்று மாலை நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்தார்.