ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கோலாகலம்!

நாடு முமழவதும் நேற்று சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு சிவத்தளங்கலில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைப்பெற்றன, அதில் லட்சக்கணக்கான பக்தர்களும் வழிப்பாடு நடத்தினர்.
அதே போல், கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று மஹா சிவராத்திரி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்சியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்.
மேலும், ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் , அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

விழா தொடக்கத்தில், காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, ‘மகிழம்’ மரக்கன்று நடப்பட்டு, வீரர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு தொடங்கி, மறு நாள் காலை 7 மணி வரை நடைப்பெற்றது. பல்வேறு இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹமித் திரிமேதி, பிண்ணனி பாடகர்கள் ஹரிஹரன், கார்த்திக் ஆகியோரின் இசைக் கச்சேரி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.பின், சத்குரு ‘சம்போ’ மந்திரத்தை உச்சரித்து பேச தொடங்கினார்.

நாம் மதங்களை தாண்டி, மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டும். ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவருக்கும் நன்மை சேர்க்கும் விதமாக, யோகா என்னும் அற்புத கலையை அறிவியல்பூர்வமாக உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உரையாற்றினார்.