இவர்கள் மேல் எனக்கு மயிரிழை கூட மரியாதை கிடையாது – கமல்ஹாசன் ஆவேசம்

267

ஜெயஸ்ரீ மரண விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும் அரசுக்கு எதிராக அவர் பல கருத்துகளை கூறியுள்ளார். அதோடு, தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் எனவும் டிவிட் செய்துள்ளார்.

பாருங்க:  கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் ரீமேக்