cinema news
இயக்குனர் பாலாவின் வித்யாசமான வாழ்த்து
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக அளவில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் திரு முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தினமும் பல முக்கிய பிரபலங்கள் திரு ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் பாலாவும் தனது வித்தியாசமான வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.
தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் இதை தவிர்க்க முடியவில்லை தங்களின் ஆற்றல் செயல் அனைத்தும் பண்பாடு அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம் என பாலா தெரிவித்துள்ளார்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி
என்ற திருக்குறளையும் உவமையாக கொண்டு இயக்குனர் பாலா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.