இன்று வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும்; சென்னை வானிலை மையம்!

997

ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றானது, சென்னை தென் கிழக்கில் சுமார் 870 கி.மீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது, தீவிர புயலாக நாளை தீவிரமடையும் என அறிவித்துள்ளது.

மழையை பொறுத்தவரை, ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். காற்றை பொறுத்தவரை, வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில், மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வரை காற்று வீசக்கூடும் .

மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பாருங்க:  தமிழகம் மற்றும் புதுவையில் 'ரெட் அலர்ட்'!