இன்று மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது!

328
World Sparrow Day 2019

சிட்டு குருவி பறவை இனமானது அழிந்து கொண்டு வருகிறது, அதனை பாதுகாப்பதற்காக உலக சிட்டு குருவி தினம் இன்று மார்ச் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் நகரங்களில் பஞ்சமில்லாமல் காணப்பட்ட பறவை இனம் சிட்டு குருவி. சிட்டு குருவியின் கீச் கீச் சத்தம் தான் அதிகாலை விடியலில் அதிக அளவில் கேட்கப்படும்.

ஆனால், இப்போது நகரங்களை விட்டு அவை சென்றுவிட்டன.சிட்டு குருவி இனம் அழிவிற்கு, செல்ஃபோன் டவரில் இருந்து வரும் கதிர் வீச்சுகள் அந்த பறவைகளுக்கு இடையூராக இருந்ததாக கூறப்பட்டது. அது மட்டுமின்றி சிட்டு குருவி இனமானது பெரும்பாலும் வீடுகளில் கூடு கட்டி வாழும், ஆனால் தற்போது அத்தகைய வசதிகள் நகர்புரங்களில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உணவு பற்றாற்குறையாலும், அந்த பறவைகளின் எண்ணிக்கை குறையப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காற்று மாசுபடுதலாலும், ரசாயணங்கள் கலந்த காற்றால் பூச்சு இனங்கள் அழியப்பட்டதால், பூச்சியை உணவாக உட்கொள்ளும் பறவை இனங்கள் அழியப்பட்டன.ஆனால், இன்றும் சிட்டு குருவி இனங்கள் கிராமப்புறங்களில் வசித்து கொண்டு வருகின்றன.ஏனெனில், தூய்மையான காற்று, தேவையான உணவுகள், கூடு கட்ட இடங்கள் எல்லாம் அங்கு கிடைப்பதே காரணம்.

பறவை இனமானது மனிதர்களுக்கு, உதவியாக இருக்கும். எப்படி என்றால், பறவைகள் தன் வாயில் கவ்விய விதைகளை ஆங்காங்கு போட்டு விட்டு போவதால் தான், மழை வர காரணமாக இருக்கும் மரங்கள் வளர்கின்றன. பறவை இனங்கள் மனிதர்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை, ஆனால், நாம் தான் சில பல இனங்கள் அழிய காரணமாக இருக்கிறோம். மற்ற உயிரனங்களையும் பாதுகாத்து வாழ, தொடங்குங்கள்.மற்ற இனத்தை பாதுகாத்தால், நம் இனமும் செழித்து வாழும்!

பாருங்க:  தமிழக மக்கள் தவறு செய்துவிட்டனர் - தமிழிசை பேட்டி