இந்தோனேஷியாவில் கடந்த 2004ல் நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு தொடர் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. 2004ல் ஏற்பட்டது போல பெரும் நிலநடுக்கம் நேராமல் இருக்க முன்னேச்சரிக்கை விடப்படுகிறது.
இன்றும் இந்தோனெஷியாவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சற்று முன் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எச்சரிக்கை கடலோர பகுதிகளுக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சுனாமி ஆபத்து இல்லை என இந்திய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.