இந்திய வீரர்களுக்கு சல்யூட் – கமல்ஹாசன் பெருமிதம்

387

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவப்படையினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானின் எல்லைப்பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய போர் படை வீரர்கள் 12 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. 

இந்த சம்பவத்திற்கும் நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு நமது 12 வீரர்களும் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். இந்தியா அதன் வீரர்கள் மீது பெருமை கொள்கிறது. அவரளுக்கு சல்யூட்”என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல -கமல்ஹாசனுக்கு மோடி பதில்!