இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

533

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சென்ற, இந்திய விமானப்படை வீரர், அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் நெருக்கடியாலும், நன்னடத்தை காரணமாகவும், பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் பலத்த மரியாதையுடன் விடுவிக்கப்பட்டார்.

அதற்கு பின்னர், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பெரிதும் போற்றப்பட்டார். பலரின் ஹீரோவாகவும் திகழ்ந்தார் அபிநந்தன்.

இந்த வீரதீர செயலுக்காக, அவருக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என விமானப்படை பரிந்துரை செய்துள்ளது.வீர் சக்ரா விருது, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். அதுபோல், தைரியமான, வீரதீர செயல் செய்யும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். இதுவரை 1322 பேருக்கு, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முதல் முதலில், 1947ல் இந்த விருது வழங்கப்பட்டது. கடைசியாக, 1999ல் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இது யார் என்று தெரிகிறதா
Previous articleதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Next articleIPL 2019 : பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!