இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தனின் பிரபலமான ‘தமிழக’ மீசை ஸ்டைல்!

484

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விடாமல் தொடர்ந்து விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாகிஸ்தான் எல்லைக்குள் எதிர்பாரத விதமாக விழுந்தது. ‘மிக் – 21’ ரக விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, மார்ச் 1 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை சிறை பிடித்த போதும், விமானி அபிநந்தன் முகத்தில் ரத்தம் வழிந்த போதும், அவரது உறுதியும், துணிச்சலும் சற்றும் குறையவில்லை. விமானி அபிநந்தனின் நெஞ்சை நிமிர்த்தி எதிர் கொண்ட விதம் இந்தியர்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைத்தார்.

விங் காமாண்டர் அபிநந்தன் தமிழக அருவா ‘மீசை’ ஸ்டைல்,தற்போது இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்து பலரும் அவரது மீசை ஸ்டைல் மற்றும் அவரது உதட்டில் உதிரும் சிரிப்பையும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

பாருங்க:  சிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி