Corona (Covid-19)
இந்தியா வந்து சேர்ந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள்! தமிழகத்துக்கு எப்போது கிடைக்கும்?
சீனாவில் இருந்து முதல்கட்டமாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகம் வாங்கவிருந்த நிலையில் அதை மத்திய அரசு தடுத்து தாங்களே வாங்கி மொத்தமாக மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வோம் என அறிவித்தது.
இந்நிலையில் இந்த முதல் தவணையாக 6 லட்சத்து 50 ஆயிரம் ராபிட் சோதனைக் கருவிகள், RNA சோதனைக் கருவிகள் சீனாவிலிருந்து விமானம் மூலம் இந்தியா அனுப்பப்பட்ட கருவிகள் டெல்லி வந்து சேர்ந்துள்ளன. இந்த கருவிகள் விரைவில் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது.