abirami

இதற்காகத்தான் என்னை ரசிகர்கள் திட்டினார்கள் – அபிராமி ஓப்பன் டாக்

மக்கள் எதற்கான தன்னை திட்டினார்கள் என பிக்பாஸ் அபிராமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக்பாஸ் வீட்டில் அதிகமாக அழுது கொண்டே இருந்தவர் இவர்தான். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர்.

தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில் உங்களை எதற்காக மக்கள் திட்டினார்கள். எதற்காக பாராட்டினார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அபிராமி ‘நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நன்றாக நடித்திருந்தேன் என மக்கள் பாராட்டினார்கள். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் அழுது கொண்டே இருந்ததற்காகவும், சோகமாக இருததற்காகவும் என்னை திட்டினார்கள்’ என அவர் கூறியுள்ளார்.