வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் இளம்பெண் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்டரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரூபன் சக்கரவர்த்தி. இவரது அலுவகத்திலிருந்து அருணா என்கிற இளம்பெண் பல வாலிபர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி அலுவலகம் வந்த பலரிடமும் இனிக்க இனிக்க அருணா பேசியுள்ளார். ரூ.50 ஆயிரம் கொடுத்தால் ஒரு மாதத்தில் வேலை என அவரும், ரூபன் சக்கரவர்த்தியும் கூறியதை கேட்டு பலரும் பணத்தை கட்டியுள்ளனர். வேலைக்கான சான்றிதழையும் அளித்துள்ளனர். ஆனால், ஒரு கூறியபடி ஒரு மாதத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படவில்லை.

எனவே, சந்தேகமடைந்த வாலிபர்கள் அங்கு சென்று பார்த்த போது அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதில், அதிர்ச்சியான அவர்கள் ரூபன் சக்கரவர்த்தி மற்றும் அருணாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவைகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அருணாவை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், தலைமறைவான ரூபன் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். 46 வாலிபர்களிடம் ரூ.26 லட்சம் வரை அவர்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.