அலைக்கழித்ததால் ஆத்திரம் – கடை முன்பு செல்போனை எரித்த வாடிக்கையாளர்!

488
அலைக்கழித்ததால் ஆத்திரம் - கடை முன்பு செல்போனை எரித்த வாடிக்கையாளர் 01

சென்னையில் செல்போன் கடைக்கு முன் புதிய செல்போனை வாடிக்கையாளர் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல மொபைல் ஷோரூமில் ஒரு வாடிக்கையாளர் சமீபத்தில் ஒரு புதிய செல்போனை வாங்கியுள்ளார். வாங்கிய ஒரிரு நாளிலேயே செல்போனில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, செல்போன் வாங்கிய கடைக்கு வந்து இதுபற்றி கூற, அவர்கள் செல்போன் சர்வீஸ் செண்டருக்கு செல்லுங்கள் எனக்கூறிவிட்டனர். ஆனால், அங்கும் அவர்கள் அந்த கோளாறை சரி செய்து கொடுக்கவில்லை. மேலும், செல்போன் வாங்கிய கடையில் சென்று முறையிடுங்கள் எனக்கூறியுள்ளனர்.

இப்படி தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் இன்று காலை கடையின் முன்பு வந்து அவர் வாங்கிய புதிய செல்போனை தீ வைத்து கொளுத்தினார். அங்கு சுற்றியிருந்த பொதுமக்கள் இதை புகைப்படம் எடுத்தனர். அதன்பின் போலீசார் அங்கு வந்த அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாருங்க:  தீபாவளிக்கு என்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?