#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்

‘#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்’ ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்!

நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.

40 வருட திராவிட கட்சிகளின் அரசியலை மாற்ற உங்களால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை அழைக்கிறேன், இது தான் சரியான தருணம் வா தலைவா, வந்து மாற்றத்தை உருவாக்கு என அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு பதில் தரும் விதமாக அஜித் ரசிகர்கள் #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர்.ஏற்கெனவே, அஜித் தெரிவித்திருந்ததை அவர் ரசிகர்களும் பதிவிட்டிருந்தனர்.

அரசியல் நிலைப்பாட்டை குறிப்பிட்டு, நான் தனிப்பட் முறையிலோ, நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சார்ந்த கதையில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

என்னுடைய இந்த முடிவுக்கு பின்னர் கூட, என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சில அரசியல் நிகழ்வுகளில் சம்மதப்படுத்தி பல செய்திகள் வந்தது.என் பெயரையோ , புகைப்படத்தையோ எந்த ஒரு அரசியல் நிகழ்வில் சம்மதப்படுத்துவதை நான் விரும்பமாட்டேன் என கூறியிருந்தார்.