அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு!

308
அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அம்மா உணவகங்களில் 1 இட்லி ரூ.1 க்கும், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், சப்பாத்தி 1 செட் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே விலையில் தொடர்ந்து உணவுகள் விற்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து தொழிலாளர்களுக்கு உணவை பறிமாறினார்.இதே போல், சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களில், மற்றும் தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளிலும், 125 நகராட்சிகளிலும் உள்ள 251 அம்மா உணவகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவி! அதுக்கும் குற்றம் சொன்னா எப்படி?