அப்ப கோட்சே இந்து இல்லையா? – மோடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

281
அப்ப கோட்சே இந்து இல்லையா

ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அவர் தெரிவித்தார். மேலும், முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதைக் கூறவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். அந்த இந்து தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே” என அவர் தெரிவித்தார்.

இதற்கு பாஜகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்று  ஒரு வட மாநில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி “கமல்ஹாசனை போன்று அறிவுக்கூர்மை எனக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் அறிவுக்கு எட்டியவரை ஒரு இந்து ஒரு போதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. அப்படி ஒருவர் இருந்தால் அவர் இந்துவே கிடையாது” என பதிலளித்துள்ளார்.

இதைத் தொடந்து, காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு இந்துதான்… ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது எனில், கோட்சே இந்து இல்லையா?’ என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாருங்க:  தமிழ் பிக்பாஸில் இதுவே முதல் முறை - கலக்கல் அப்பேட்!