அன்புமணி ராமதாஸ் தோல்வி? – தர்மபுரியில் தொடர்ந்து பின்னடைவு!

358
அன்புமணி ராமதாஸ் தோல்வி

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சியாக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக 343 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 93 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதர கட்சிகள் 106 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எனவே, மோடி பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வது உறுதியாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தர்மபுரி தொகுதியில்  பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ். செந்தில்குமார் 2,83,481 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் 2,54,376 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

செந்தில்குமார் அன்புமணி ராமதாஸை விட 29, 105 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருவதால் அவரின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பாருங்க:  ராதே ஸ்யாமில் பிரபாசுடன் இணையும் ஜெயராம்