comment stalin insult hindus

அடுத்து அம்பானி வீட்டு கல்யாணம் வருதே – ஸ்டாலினை கிண்டலடித்த கஸ்தூரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகை கஸ்தூரி கிண்டலடித்த விவகாரம் திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் ஸ்டாலின், அங்கு கடைபிடிக்கப்படும் இந்து சம்பிரதாயங்கள் குறித்து கிண்டலடிக்கும் வகையில் விமர்சனம் செய்து வருகிறார். ஐயர் ஓதும் மந்திரம் மாப்பிளைக்கும் புரியாது. மணமகளுக்கும் புரியாது. அந்த ஐயருக்கும் புரியாது எனக்கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர் பேசிய ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கஸ்தூரி “எந்த கல்யாணத்துக்கு போனாலும் இந்த உரை தான் போலிருக்கு. அடுத்து அட்டென்ட் பண்ண போறது அம்பானி வீட்டு கல்யாணம் – அங்கேயும் புகை, சமஸ்க்ருத மந்திரம், ப்ராஹ்மண புரோகிதர்கள் எல்லாம் இருப்பாங்களே” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.