‘அஜித்’ பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

362

தல அஜித்தின் பிறந்தநாளான இன்று (மே 1), பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் ரசிகர்கள் பல இடங்களில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

திரை உலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி, திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பை பெற்ற திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். #HBDAjithkumar என பதிவிட்டுள்ளார்.

வீணை இசைக்கலைஞரான ராஜேஷ் வைத்தியா, அவர் வீணையினால் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அஜித்தின் மாஸ் படமான தீனாவில் இருந்து “வத்திக்குச்சி பத்திக்காதடா, யாரும் வந்து உரசர வரையில” என்ற பாடலை வீணையால் வாசித்து அந்த வீடியோவை வெளியிட்டு, அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாருங்க:  ஏப்ரல் 24 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்