அக்ஷய திருதியை முன்னிட்டு தங்க நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்!

453
அக்ஷய திருதியை முன்னிட்டு

அக்ஷய திருதியை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினால், மேலும் வீட்டில் செல்வம் சேரும் என்று பலரும் நம்புகின்றனர். இதனால், ஏற்கனவே நகை கடைகளில் முன்பதிவு செய்தவர்கள், மற்றும் நேற்றும் சென்று மக்கள் நகைகளை வாங்கினர். இதனால், நேற்று அதிகாலையிலே தகை கடைகள் திறக்கப்பட்டன. நேற்று நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதியது.

சுமார் 10ஆயிரம் கிலோ வரை தங்கம் விற்பனை ஆகியுள்ளது. தங்கம் விலை, நேற்று முன்தினத்தை விட ரூ.40 உயர்வாக நேற்று விற்கப்பட்டது. எனிலும், விலையை பொருட்படுத்தாமல், மக்கள் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

கடந்த ஆண்டு அக்ஷய திருதியையில், சுமார் 8 கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு 10 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. மேலும், இந்த ஆண்டு முன்பதிவு செய்தவர்களின் எண்டிக்கை அதிகரித்துள்ளது. அதிக அளவில் மக்கள் காத்திருந்து அக்ஷய திருதியைக்கு நகை வாங்கியுள்ளனர். மேலும், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் நகை வாங்கியவரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

பாருங்க:  வளை விரித்த பாஜக.. ஆப்பு வைத்த மோகன்லால்