வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர புயலான ஃபோனி புயல், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பூரி மாவட்டத்தில் கரையை கடக்கிறது. சுமார் 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. அத்துடன் ஒடிசாவின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஃபோனி புயல், இன்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை கரையை கடக்கும்.
புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை பணியாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள 14 நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு தயார் செய்வதற்கு 5 ஆயிரம் சமயல் அறைகள் தயார் செய்து தரப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுப்பட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
இதனால், புவனேஷ்வர் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டக்கப்பட்டுள்ளது. 140 ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.