10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

சென்னையில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது 10 வயது பெண் குழந்தையை நேற்றில் இருந்து சிறுமி காணவில்லை. இதையடுத்து போலிஸாரிடம் புகாரளித்தும் அக்கம்பக்கத்தில் தேடியும் வந்துள்ளனர் பெற்றோர்.

இதையடுத்து இன்று காலை குடியிருப்புக்கு அருகே உள்ள தென்னை மரத்தின் அருகே காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் போலிஸார் தீவிர விசாரணை செய்ய சுரேஷ் என்பவர் மேல் சந்தேகம் எழும்ப அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்ததில் குழந்தையை மாடியில் இருந்து தள்ளிக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது சிறுமியிடம் அவர் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். அதற்கு சிறுமி ஒத்துழைக்காததால் அவரைக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.